45 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை ஜனாஸாவாக மீட்பு


கிண்ணியா காக்காமுனைப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட நபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காக்காமுனைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய உவைஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் வசித்த பகுதிகள் எரியூட்டப்பட்டன (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.
 
85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளமை மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.றவுபாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி குறித்த இடத்துக்கு எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தரவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 


 

சீரற்ற காலநிலை 30 பில்லியன் நஷ்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளத்தால் 30 பில்லியன் வரையில் பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இதேவேளை சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 127,882 குடும்பங்களைச் சேர்ந்த 482, 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிங்களவரே இலங்கையின் தேசிய இனம்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாச்சியமளிதுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில நேற்றைய ஆணைக்குழுவின் அமர்வின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கியமான விடையங்களை மட்டும் இங்கு தருகின்றோம் இலங்கையை பொறுத்தவரை சிங்கள மக்கள் மட்டுமே ஒரு இனமாக கருத முடியும் அந்த வகையிலேயே எமது வரலாறு கலாசாரம் அமைந்துள்ளது.

 இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம் அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்கலாம் அவர்கள் சுயாட்சியையே சுய நிர்ணய உரிமைகளையோ கோரமுடியாது சிறு மக்கள் பிரிவினருக்கு உள்ள உரிமையையே அனுபவிக்கமுடியும் எஎன்று தெரிவித்துள்ளார் 

மேலும் அவர் சாச்சியமளிக்கையில் தற்போது மக்களுக்கு ஒரு விடையத்தை கூறவேண்டும் அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம் அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள் நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினை வாதம் உருவாகலாம் புலிகளின் வால் மட்டுமே இலங்கையிளிருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிக்கப் பட்டுள்ளதாக கூறுகின்றோம்.

 இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவில்லை 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர் இவர்கள் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பலஸ்தீனுகுள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர் …. நாங்கள் பௌத்தர்கள் தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கபடும் விடையங்களை ஏற்றுகொள்வோம் தமிழ் ஈழம் சரியான கோரிக்கை என நிரூபித்தால் அதற்காக முன்நிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம் ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை . மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு விடுதலை


பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் உரையாற்றுகையில், 

தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் மாகாண ரீதியிலான மேல் நீதிமன்றங்களில் பிணை கோரக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

மலேசியாவுக்கு அச்சுறுத்தல்


சர்வதேச மற்றும் தேசிய பொலிஸாரின் உதவிகளைப் பெற்று இவ்வாறான நபர்கள் குறித்த தகவல்களை திரட்டிவருவதாக அவர் கூறியுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், சீக் ஆயுதக்குழு என்பன தமது இயங்கங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக மலேசிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12ற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது!

கொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப்பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியூம் இழைக்கப்படமாட்டாது என  பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வூகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்குவதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியூடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் வதியூம் மிகவூம் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தளிவூபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று அவர் விளக்கமளித்தார்.

இந்த மாதிரித் திட்டம் வெற்றியளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
சேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர்களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More