கொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது!

கொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப்பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியூம் இழைக்கப்படமாட்டாது என  பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வூகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்குவதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியூடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் வதியூம் மிகவூம் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தளிவூபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று அவர் விளக்கமளித்தார்.

இந்த மாதிரித் திட்டம் வெற்றியளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
சேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர்களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More